Real estate rates in Tamil Nadu increased like Everest

மாசு படியும்!

கருமுத்து, ராமநாதபுரம், கோவையிலிருந்து எழுதுகிறார்: இன்று தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, முழுவதும் வீட்டுமனைகளின் விலை எவரெஸ்ட் சிகரம் போல உயர்ந்துவிட்டது.தி.மு.க., ஆட்சிக்கு முன் ஒரு ஏக்கர் நிலம் ஒரு லட்சமாக இருந்தது. இன்று 10 லட்சமாகி விட்டது. 10 லட்சமாக இருந்தது ஒரு கோடியாக உயர்ந்து விட்டது. இந்த விலை ஏற்றம் நடுத்தர குடும் பங்களை நடுங்க உள்ளது; இடம் வாங்கி வீடு கட்டுவது என்பது பகல் கனவாகிவிட்டது.

இந்த விலையேற்றத்திற்கு பலவித காரணங்களை கூறுகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர் களாலும், அவர்கள் அனுப் பும் பணத்தாலும் என்கின்றனர். வங்கிகள் வைப்பு நிதிக்கு தரும் வட்டிகள் குறைந்ததால், அதை திரும்ப பெற்று இடத்தின் மேலே போடுவதால், இந்த விலை ஏற்றம் என்கின்றனர்.இடைத்தரகர்களும், அரசியல் பினாமிகளும் தங்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதாலும், வெள்ளை, கறுப்பு ஆவதினாலும் இந்த விலை ஏற்றம் என்கின்றனர். இதனால் விவசாய பூமிகளெல்லாம் பிளாட்டாகும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், பத்திரிகையெல்லாம் பத்தி பத்தியாக கட்டம் போட்டு சதுர அடி என்ன என்பதை விளக்குகிறது. இந்த விலை ஏற்றத்தால், பத்திர பதிவு மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கலாம். ஆனால், நடுத்தர வர்க்கத்தினருக்கு இருக்க இடம் கூட இல்லாத நிலை தான் ஏற்படும்.எனவே, தமிழக முதல்வரும், கூட்டணி கட்சித் தலைவர்களும், இந்த விலை ஏற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லை என்றால், நடுத்தர மக்களின் எதிர்ப்பைத் தான் சந்திக்க வேண்டிவரும்; “நல்லாட்சி’ என்ற பெயருக்கு மாசு படிந்துவிடும்.

Thanks to : http://www.dinamalar.com/2007jan08/ithu.asp

Dinamalar, Real Estate இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

will sharukhan win in KBC?

கேபிசி.,யில் ஷாரூக் சாதிப்பாரா?விளம்பரம் மட்டுமே 150 கோடி ரூபாய்

—————————-

மும்பை: இன்னும் சில நாட்களே உள்ளன, புது “கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி துவங்க. கே.பி.சி.,யில் தொடர்ந்து அமிதாப்பின் சிங்கக் குரலை கேட்டுவிட்டு, இப்போது ஷாரூக்கான் பேச்சை ரசிப்பரா “டிவி’ நேயர்கள்? இப்போதே அந்த பரபரப்பு ஆரம்பித்துவிட்டது.

ஸ்டார் “டிவி’யில் இந்தியிலும், ஸ்டார் விஜய் சேனலில் தமிழிலும் ஒளிபரப்பாக உள்ளது. இந்தியில் எந்த அளவுக்கு பிரபலம் ஆகப் போகிறது என்பது ஷாரூக் கையில் தான் உள்ளது. * கடந்த கேபிசி.,-1, கேபிசி.,-2 ஆகியவற்றில் பெரிதும் கவர்ந்துவிட்டவர் அமிதாப். அவர் அளவை தாண்டி, ஷாரூக் சாதிப்பாரா, கவர்வாரா? * விளம்பரம் வருவதில் பெரிதும் பாதிப்பில்லை. ஆனால், 150 கோடி ரூபாய் விளம்பரங்கள் குவிந்ததற்கு ஏற்ப தொடர் விறுவிறுப்பாக இருக்குமா? * மக்கள், ஷாரூக்கின் இந்தி பேச்சை கேட்டும், அமிதாப்பை விட நன்றாக இருக்கிறது என்று பெயர் வாங்குவாரா? மும்பை ,டில்லி, கோல்கட்டா மக்கள் என்ன நினைக்கின்றனர்? இப்படி ஒரு சர்வேயை முத்ரா மீடியா ஸ்பெஷலிஸ்ட்டான, “ஆப்டிமம் மீடியா சொல்யூஷன்ஸ்’ ஏஜன்சி எடுத்தது. மூன்று நகரங்களிலும் சில நூறு பேரிடம் எடுத்த சர்வேயில், 71 சதவீதம் பேர், “ஷாரூக்குக்கு ஒரு சான்ஸ் தரலாம்’ என்றனர்.

“நாங்கள் நிச்சயம், ஷாரூக்கின் கே.பி.சி.,-3 ஐ பார்ப்போம்’ என்று 21 சதவீதம் பேர் கூறினர். பணக்கார வர்க்கத்தினருக்காக விளம்பரம் செய்யும் உயர் கம்பெனிகள் பலவும் சந்தோஷத்தில் தான் உள்ளன. காரணம், அவர்கள் ஏற்கனவே ஷாரூக்கை வைத்துத்தான் விளம்பரம் செய்து வருகின்றனர். அதனால், இந்த நிகழ்ச்சியால், அவர்களுக்கு தங்கள் பொருட்களுக்கு அதிக மவுசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். கே.பி.சி,.-3 நிகழ்ச்சி தொடருக்கு மட்டும் 150 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்கள் இப்போதே “புக்’ செய்யப்பட்டுவிட்டன. ஆனால், சிக்கல் என்னவென்றால், உலகக்கோப்பை கிரிக்கெட் நேர்முக ஒளிபரப்புகளுக்காகவும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகவும் 250 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்களை இந்த நிறுவனங்கள் ஒதுக்கி உள்ளன. கே.பி.சி.,-3, உலகக்கோப்பை இரண்டும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் என்பதால், சில நாட்கள், கிரிக்கெட் ரசிகர்கள், கே.பி.சி.,யை விட, உலகக்கோப்பை கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தான் பார்ப்பர் என்ற தர்மசங்கடத்தையும் ஷாரூக் கடந்தாக வேண்டும். அமிதாப்பை விட அவர் சிறப்பாக செயல்பட்டு, கே.பி.சி.,-3 ஐ சாதிக்க வைப்பார் என்று பலரும் எதிர்பார்த்தாலும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புகள் அவர் எண்ணத்தில் மண்ணை போடாமல் இருக்க வேண்டும் என்ற பயமும் பலரிடம் உள்ளது.
Thanks to : Dinamalar.com

Celebrities, Dinamalar, TV இல் பதிவிடப்பட்டது . 1 மறுமொழி »

Hello world!

I’m going to post my favourite news articles for reference. Mostly in tamil. but might also be in english.

- AKRaman.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 2 மறுமொழிகள் »
Follow

Get every new post delivered to your Inbox.